நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை கிண்டல் செய்து அண்மையில் வெளியிடப்பட்ட “Innocense of Muslims – முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” என்ற அமெரிக்க திரைப்படத்தின் முன்னோட்ட காணொளிக்கு (Trailer) எதிர்ப்புத் தெரிவித்து உலகமெங்கும் வன்முறைகள் இடம்பெறத் துவங்கி சில நாட்கள் கடந்துள்ள நிலையில், வீடியோ காட்சிகளை தமது தளங்களிலிருந்து நீக்குதல் தொடர்பான தமது முடிவின் காரணமாக, கூகிள் மற்றும் அதன் துணைநிறுவனமான Youtube ஆகியன சர்ச்சைக்குள் சிக்கியுள்ளன.
முஹம்மது நபி (ஸல்) அவர்கனை ஒரு கோமாளியாகவும் மேலாடைகளை அபகரிக்கின்ற காமுகனாகவும் இழிவாக சித்தரிக்கும் கானொளியொன்று, Youtube எனப்படும் கானொளிகளை பரிமாற்றம் செய்ய உதவும் பிரபல இணையதளத்தில் வெளியானதையடுத்து, இவ் வாரமுதல் மத்திய கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அமெரிக்க, தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த படத் தயாரிப்பாளனான ”நகவ்ளா பBஸ்ஸலி நகவ்ளா” (Nakoula Basseley Nakoula) என்பவனால் தயாரிக்கப்பட்ட திரைப்படமொன்றின் முன்னோட்ட காணொளியான இது முதன்முதலாக கடந்த ஜூலை மாதம் இத் தளத்தில் உட்பதிகை செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. வன்முறைகள் வெடித்ததையடுத்து லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் உட்பட அமெரிக்க அரச திணைக்களத்தில் பணியாற்றிய நான்கு அமெரிக்கர்கள் பெங்காஸியில் தமது உயிர்களை இழந்தனர்.
எதிர்ப்பலைகள் எல்லை மீறியதன் காரணமாக, தமது இணையதளத்தின் எல்லா இடங்களிலிருந்தும் குறித்த காணொளிகளை நீக்குமாறு வெள்ளை மாளிகை Youtube ஐ வேண்டிக்கொண்டது. ஆனால் இதுவரை Youtube தமது சமூக நியமங்கள் தொடர்பான விதிமுறைகளை (Community standards guidelines) காரணங்காட்டி, எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனாலும், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமொன்று அரசியல் புயலொன்றின் மையத்தில் தன்னைத்தானே நிறுத்திக்கொள்வதொன்றும் புதிதல்ல. மேலும் குறிப்பாக, இணையத்தளமானது இன ரீதியாக வேறுபட்ட கலாச்சார மற்றும் அரசியல் பாரம்பரியம் கொண்ட, உலகின் எல்லா மூலைகளுக்கும் வியாபித்துள்ளது. ஆனாலும் முந்தைய நிகழ்வுகள் யாவும் ஜனநாயகமற்ற ஆட்சிகளுக்கும் தொழில்நுட்பத் துறைகளுக்கும் இடையிலான முரண்பட்ட செல்வாக்குகளை மையப்படுத்தியதாகவே அமைந்தன. உதாரணமாக,
- தென்னாப்பிரிக்காவின் இனப்பிரிவினை அரசாங்கத்தை வீழ்த்த முயன்ற கிளர்ச்சியாளர்களின் அழுத்தம் காரணமாக, 1980 களில் அமெரிக்க கணினி தயாரிப்பாளர்கள் தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டமை.
- ஜூன் 14 – டியானான்மென் சதுக்க (Tiananmen Square) படுகொலையின் 15வது ஆண்டு பூர்த்தியடையும் தருவாயில் சீன ஊடகவியலாளரான ஷீ-டாவோ, சீன அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை வெளிநாட்டு சுயாதீன சீனமொழி இணையதளங்களில் வெளியிட்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு Yahoo நிறுவனத்துக்கு பிறப்பிக்கப்பட்ட ஆணை, அவ் ஊடகவியலாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணையை பெற்றுக்கொடுக்க காரணமாக அமைந்தது.
நீங்கள் எந்தப்புறம் சாய்ந்தாலும், மேற்சொன்ன மோதல்கள் யாவும் ஒப்பீட்டளவில் இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடியவை. ஆனால், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்ற விடயமானது தற்போதைய சிக்கல் நிலைமையை மேலும் தூண்டுவதாகவே உள்ளது. 7ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வெற்றிகொள்ளப்பட்டது தொடக்கம் இன்றுவரை பல நூற்றாண்டுகளாக, முஸ்லிம்களுக்கும் மேற்குலகத்துக்குமிடையில் மோதல்கள் இருந்துவருகின்றன. அவ்வாறானதொரு சூழ்நிலையில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய நிறுவன கையேடு எங்கே? எனற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் Youtube இதுவரை எகிப்து, லிபியா, இந்தோனேஸியா, இந்தியா ஆகிய நாடுகளில் இந்த காணொளி பார்க்கப்படுவதனை தடைசெய்துள்ளது. ஆனால், ஒபாமாவின் நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம், தமது மதிப்பாய்வின் பின்னர் குறித்த காணொளி அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்படுகின்ற சமூக நியமங்கள் தொடர்பான தமது விதிமுறைகளுக்கு முரணானது அல்ல என தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதென்பதும் குறிப்பி்த்தக்கது.
(நன்றி: CBS News)
No comments:
Post a Comment