முஸ்லிம் உலகில் பெரும் கண்டன எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ள இஸ்லாமிய-விரோத வீடியோ படத்தில் தோன்றிய நடிகை ஒருவர், அந்தப் படத்தை இயக்கியவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தன்னை குறித்த படத்தில் நடிக்கச் செய்ததன்மூலம் அவதூறு மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக சின்டி லீ கார்ஸியா படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வீடியோ காட்சி வெளியிடப் பட்டுள்ள யூடியுப் இணையதளத்திலிருந்து அதனை நீக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிபதி ஒருவரிடம் சின்டி மனுச் செய்திருக்கிறார்.
பண்டைக்கால எகிப்தில் நடக்கும் கதையொன்றை சித்தரிக்கும் சாகச திரைப்படமொன்றை படமாக்குவதாகக் கூறியே தானும் சக நடிகர்களும் நடிக்கவைக்கப்பட்டதாக அந்த நடிகை கூறுகிறார்.
திரைக்கதையில் முகம்மது நபி பற்றிய எந்தக் குறிப்புகளும் இருக்கவில்லை என்றும் படமாக்கப்பட்ட பின்னரே இஸ்லாமிய-விரோத கருத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் எகிப்திய தயாரிப்பாளர் என்று நம்பப்படும் நக்கோலா பாஸ்லி நக்கோலா தலைமறைவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment