ஜீவனுள்ள அரபு வசந்தத்தின் தென்றல் இமாம் மஹ்தி(அலை ) அவர்களின்வருகையுடனும் இஈஸா (நபி ) அவர்களின் வருகையுடனும்தான் பூரணமாகும் என்று ஐ நா வின் பொதுச்சபையில் உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாத் உலகில் புதிய அதிகார அமைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டியது அவசியமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்
ஐ நாவின் 67 ஆவது மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்அஹ்மதி நஜாத்தின் எட்டாவதும் கடைசியுமான ஐ நா சபையின் இந்த உரைஅனைவராலும் ஆவலுடன் எதிர்பாரக்கப்பட்ட நிலையில் அவர் இன்று தனதுபிரத்தியேக பாணியில் உரையாற்றியுள்ளார் .
‘உலக அரசியல் இரட்டை நிலைப்பாடு கொண்டதாக நியாயம் அற்றதாக பாரபட்சம் வாய்ந்ததாக உள்ளது.இரட்டை நிலைப்பாட்டின் அடிப்படையில்தமது பொருளாதார மற்றும் தமது ஆதிக்கத்தை பரவாலாக்கும் நோக்கிலும்ஆக்கிரமிப்புக்கள் மற்றும் யுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உலகில் புதிய அதிகாரம் மாற்றப்படவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.ஏனெனில் சிறுபான்மையினரான சில நாடுகள் உலக அரசியலில் ஆதிக்கம்செலுத்தி அழிவுக்கு வழியமைத்து வருகின்றன .இப்போது உள்ள உலககட்டளையானது மனிதத்துக்கு எதிரான அடிமைத்துவத்தையும் இஊழலையும் இபுறக்கணிப்பையும் இஅடக்குமுறையையும் இபாரபட்சத்தையும் அடிப்படையாககொண்டுள்ளது .
தமது விஞ்ஞான இதொழிநுட்ப அனுகூலங்களுக்காக தற்போதுள்ள உலக கட்டளையின் படி நாடுகளுக்கிடையே மோதல்களை தோற்றுவித்து அவை மூலம் வல்லரசுகள் அனுகூலம் பெற்று வருகின்றன .ஐநா அனைவருக்கும் உரியது .ஆகவே அதில் உள்ள சில நாடுகள் மீது பாரபட்சம் காட்டப்படக்கூடாது .ஐ நாவின் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும் . ஐ நாவின் பாதுகாப்பு சபையில் உள்ள ஐந்து நாடுகளுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம்உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது .வல்லரசு நாடுகள் நவீன அழிவுதரும் ஆயுதங்களை பரிசோதிப்பது கண்டிக்கப்பட வேண்டியதொன்று.நாகரிகமற்ற சியோனிசம் இராணுவ நடவடிக்கை மூலம் ஏனைய நாடுகளைஅச்சுறுத்தி வருகின்றது .ஜீவனுள்ள அரபு வசந்தத்தின் தென்றல் இமாம்மஹ்தி(அலை ) அவர்களின் வருகையுடனும் இஈஸா (நபி ) அவர்களின் வருகையுடனும்தான் பூரணமாகும் .அவர் உலகில் அழகான இநேர்வழியைமனித சமூகத்துக்கு காட்டுவார் ‘ என்று அவர் உரையாற்றினார்.
No comments:
Post a Comment