Search This Blog

Pages

Wednesday, September 19, 2012

பிரான்ஸ் பத்திரிகையில் நபிகளை கேலி செய்யும் சித்திரங்கள்: பதற்றத்தில் பிரான்ஸ்


france
முகமது நபி அவர்களை பரிகாசம் செய்யும் வகையில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று கேலிச் சித்திரங்களை வெளியிட்டதை அடுத்து இருபது நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் மற்றும் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படும் எனும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையன்று அந்த நாடுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் இடம்பெற்ற பிறகு மேலும் பதற்றங்கள் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் காரணமாகவே பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேலிச் செய்திகளை வெளியிடும் பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ இவ்வகையில் இருபது படங்களை வெளியிட்ட நிலையில் தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் லாரேண் ஃபாபியே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முகமது நபியை கேலி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட சர்ச்சைகுரிய ஒரு படம் வெளியாகி, அதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்த சூழலில், எரிகின்ற நெறுப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அந்தப் போராட்டங்களை கிண்டல் செய்தே அந்தப் பத்திரிகை கேலிச் சித்திரங்களை வெளியிட்டது.
கடந்த நவம்பர் மாதம் இதே போன்ற கேலிச் சித்திரங்களை அந்தப் பத்திரிகை வெளியிட்ட போது, அதன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

No comments:

Post a Comment