Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

மூன்றாம் உலகப் போருக்கு இஸ்ரேல் தயாரா..? ஈரான்


iran nuclior
பொருளாதார தடை விதித்து ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவுக்கோ அதன் ஆதரவு நாடுகளுக்கோ அச்சப்படாமல் ஈரான் தன்னுடைய செயற்பாடுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெளிப் பிரிவு கொமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் செயலாகும் என்றார்.
அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தாக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இஸ்ரேல் தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால் நிச்சயம் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை மேம்படுத்துவது இஸ்ரேலுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அதனால் ஈரானில் உள்ள அணு உலைகளை அழித்து விடுவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது.
ஆனால் ஈரானில் அணு ஆயுத திட்டம் நல்ல நோக்கங்களுடன் தான் செயற்படுத்தப்படுகிறது என ஈரான் கூறியுள்ளது.
இதற்கிடையில் ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் முகமத்து அலி ஜபாரி கூறுகையில், ஈரான் மீது போர் தொடுப்பது தான் ஒரே வழி என்று இஸ்ரேல் அதிகாரிகள் நினைக்கின்றனர்.
அவர்கள் மட்டும் போர் தொடுத்தால் அவர்களின் அழிவுக்கு அது வழி வகை செய்துவிடும் என்றார்.

No comments:

Post a Comment