கடந்த வெள்ளிக்கிழமை ஆயுததாரிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய எல்லையோர காவல் வீரன். அவனின் கொலைக்கு பதிலடியாகவும், இதுபோன்ற கொலைகள், அச்சுறுத்தல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் எகிப்தின் சினாய் பிரதேசத்தில் மட்டுப்படுத்திய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இஸ்ரேலிய இராணுவத்தின் அதியுயர் கட்டளை தளபதி கடந்த ஞாயிற்று கிழமை சினாய் பகுதிக்க விஜயம் செய்து யூத வீரர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியிருந்தார்.
இப்போது அதற்கு பதிலாக எகிப்தின் இராணுவ சுப்ரீம் கவுன்சில் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில் “ எகிப்தின் சினாய் எல்லைகளுல் எந்த சக்தி நுழைந்தாலும் அதன் கை துண்டிக்கப்படும். இதனை செய்வதற்கு எகிப்திய இராணுவம் தயங்காது” என காட்டமாக அறிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை, இஸ்ரேலிய அரசிற்கு விஷேடமாக வடிவமைக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இப்போது அதற்கு பதிலாக எகிப்தின் இராணுவ சுப்ரீம் கவுன்சில் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில் “ எகிப்தின் சினாய் எல்லைகளுல் எந்த சக்தி நுழைந்தாலும் அதன் கை துண்டிக்கப்படும். இதனை செய்வதற்கு எகிப்திய இராணுவம் தயங்காது” என காட்டமாக அறிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை, இஸ்ரேலிய அரசிற்கு விஷேடமாக வடிவமைக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எகிப்தின் சுப்ரீம் கவுன்சிலின் அங்கத்தவர். இவர் இதனை உத்தியோகபூர்வமாக எகிப்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.“ஒரு அங்குல நிலத்தையேனும் நாம் எதிரிகளிற்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார். முர்ஸியின் அரசியல் ஆலோசனைகளிற்கோ அல்லது அனுமதிகளிற்கோ அப்பால் பட்ட நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
“இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் எகிப்திய இராணுவம் சினாய் எல்லையில் ஒரு விரிவான இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க வழிகோலவல்லதாய் அமைந்துள்ளன” என்றும் அல் மஸ்ரி அல் யூம் தெரிவித்துள்ளார். IDF chief Benny Gantz ஞாயிற்று கிழமை உரையாற்றிய பின்னர் இவ்வாறான ஆழமான கருத்துக்கள் எகிப்தால் வெளியிடப்பட்டுள்ளன.
“பாதுகாப்பான சினாய் பிரதேசத்தை இஸ்ரேலிய இராணுவம் உருவாக்கும். இதுவே பிரதமல் பெஞ்சமின் நெதன்யாகூவின் ஆசை என இஸ்ரேலிய ஜெனரல் கூறிய வார்த்தைகள் எகிப்தை உஷார்படுத்தியுள்ளன.
இன்றைய இஸ்ரேலிய வெளிவிவகார மந்திரி. அவர் இராணு தளபதியின் உரைக்கு பச்சை கொடி காட்டும் விதத்தில் “எகிப்தியர்களுடன் அமைதிக்கான உடன்படிக்கை என்பது அர்த்தமற்றது. அவர்கள் ஏமாற்றுகாரர்கள். இரட்டைவேடம் போடுபவர்கள். நாம் செயலில் இறங்குவதே பேச்சுவார்த்தையை விட வலிதானது” என கூறியமை இங்கு கவனத்தில் கொள்ள தக்கது.
சினாய் எல்லையில் நடந்த ஊடுருவலும், அதன் பின்னரான தாக்குதலும், பதில் தாக்குதலும் அந்த சண்டையில் கொல்லப்பட்ட கோப்ரலின் இழப்பும் இன்று ஒரு பூதகரமான பிரச்சனையாக இஸ்ரேலிய அரசால் ஊதப்படுகிறது.
ஹுஸ்னி முபாரக்கின் போது அமைதியாக இருந்த சினாய் பகுதி முர்ஸியின் ஆட்சியின் போது பயங்கரவாதத்தின் பண்ணையாக மாறி வருகிறது என யூத ஊடகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் இந்த செய்தியை அரசியல் மயப்படுத்துகின்றன. முர்ஸி கடந்த திங்கள் நியூயோர்க்கின் ஐ.நா. சபை பொதுக்கூட்டதிற்கு சென்ற மறு மணித்தியாலங்களில் இஸ்ரேலிய அரசு இந்த பரப்புரை பிரச்சாரத்தை தனக்கு ஆதரவான அனைத்து ஸியோனிஸ ஊடகங்கள் ஊடாகவும் வெளியிட்டு வருகிறது.
No comments:
Post a Comment