தகவல் தொழில்நுட்ப உலகுக்கு முதலாவது Personal computer ஆன Liza (Apple I), macintosh, iPod, iPhone, iPad என இன்னும் பல புதிய படைப்புக்களை அறிமுகப்படுத்திய, 20ம் மற்றும் 21ம் நூற்றாண்டின் ஜாம்பவான்களான ஆப்பிள், தமது iPhone வரிசையில் அடுத்த வெளியீடான iPhone 5 இல் ”EarPod” எனும் புதிய ஆடியோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகின்றது.
iPhone 5 இலுள்ள இவ் EarPod ஆனது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தின் ஓர் ஆரம்பம் மட்டுமே என அந் நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சாதாரண இயர்-போனுடன் (Earphone) ஒலிபெருக்கிகளுக்கு மேலதிகமாக, ஒலிவாங்கிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட நவீன இயர்-போன் தொழில்நுட்பமே இந்த புதிய EarPod களாகும். அதாவது, முன்புறமாக ஒன்று, பின்புறமாக ஒன்று மற்றும் கீழ்புறமாக ஒன்று என மூன்று ஒலிவாங்கிகள் ஒவ்வொரு ஒலிபெருக்கித் தொகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளன. முன், பின் ஒலிவாங்கிகள் ஒன்றாக செயற்பட்டு, தெளிவான ஒலியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த அல்லது விரும்பிய இடத்திலுள்ள ஒலியை குவியலாக்கம் (focus) செய்கின்ற “Beamforming – கற்றையாக்கம்” எனப்படும் நுட்பத்துக்கு உதவுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் இந்த புதியவகை தொழில்நுட்பத்துக்கான ஏகபோக உரிமைக்காக (Patent) 2010 இல் விண்ணப்பித்திருந்தது. இதன்போது, எதிர்காலத்தில் தமது iPhone 5 இல் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இத் தொழில்நுட்பத்தின் அடிப்படைப் பயன்பாடு பற்றிய அறிமுகத்தையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப் புதிய ஆப்பிளையும் இப்போதே ருசிக்க வேண்டும் என்ற உமது ஆர்வம் விரைவில் நிறைவேற எமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment