இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்கத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஷரீஆ சட்டத்தின் வரம்புகளை மீறாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பிட்ட திரைப்படம் தொடர்பில் உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் மனவேதனையடைந்து கொதிப்படைந்துள்ளனர்.

இவ்வேளையில் சகல முஸ்லிம்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணிகளை நடாத்துவதில் எவ்விதத் தவறும் கிடையாது என்றாலும் அவை ஷரீஆவின் வரம்புகளை மீறாதிருக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment