இலவசக் கல்வி மற்றும் அரசாங்க பல்கலைக்கழகத் திட்டத்தை பாதுகாக்குமாறு கோரி பல்கலைக்கழக ஆசிரியர்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிகள் கண்டியிலிருந்தும் காலியிலிருந்தும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
காலியில் இருந்து இன்று ஆரம்பமாகும் அரச கல்வியை பாதுகாப்போம் எனும் பேரணி எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பிரதான எதிர்க்கட்சி உட்பட்டோர் இப் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த பேரணியிற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை வழங்குவதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரை எந்தவித தீர்வும் முன்வைக்காத நிலையில் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியும் ஆரம்பமாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு ஆர்ப்பாட்டப் பேரணிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
No comments:
Post a Comment