தமிழ்த் தேசிய கூட்டமைப்புஇ ஐ. தே. க. அடங்கலான கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் கிழக்கு பிரதேசத்தை முன்னேற்றுவதே எனது இலக்காகும். கிழக்கில் சகல இன மக்களும் சமமாகவும் ஒற்றுமையுடனும் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்தவும் சகல இன மக்களுக்கும் சமமாக சேவையாற்றவும் முழுமையாக தன்னை அர்ப்பணிக்கப் போவதாக புதிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ் லிம் முதலமைச் சராக ஜனாதி பதியினால் நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது எதிர் கால திட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அமைச்சரவை மூவினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என நான் அரசாங்கத்திடம் கோரியுள்ளேன். அரசாங்கமும் அந்த நிலைப்பாட்டிலே உள்ளது. இது தொடர்பாக நான் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்த போது கலந்துரையாடினேன். தமிழ்இ முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும்வகையில் மாகாண அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஒரே அளவாக வாழும் பிரதேசமாகும். மூவின மக்களுக்கும் வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. அவற்றை இனங்கண்டு தீர்வு வழங்க நான் சகல நடவடிக்கைகளும் எடுப்பேன். முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து பெருமைப்படுகிறேன்.
ஆனால் மூவின மக்களினதும் முதலமைச்சராகவும். சகல இன மத மக்களுக்கும் சமமாக சேவையாற்றுமாறும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் கிழக்கை முன்னேற்றுமாறும் ஜனாதிபதி எனக்கு ஆலோசனை தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புஇ ஐ. தே. க.இ முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளின் கருத்துக்கள் ஆலோசனை என்பவற்றையும் பெற்று சகல தரப்பும் பாராட்டக்கூடிய ஆட்சியாக கிழக்கு மாகாண ஆட்சி அமையும்.
சுற்றுலாஇ விவசாயம் கால்நடை அபிவிருத்தி மீன்பிடித்துறை அடங்களான கிழக்குடன் தொடர்புடைய பிரதான துறைகளை மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதனூடாக கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேப்படுத்தவும் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் முழு முயற்சியும் எடுப்பேன்.
பல வருடங்களாக காணப்படும் காணிப் பிரச்சினைக்கும் எனது பதவிக் காலத்தில் தீர்வு காண சகல நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளேன்.
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கு உரிய தீர்வு வழங்குவதினூடாகவே அவர்களின் மனங்களை வெல்ல முடியும். அதேபோன்றுதான் சிங்கள சமூகத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளை அடையாளங் கண்டு தீர்க்க வேண்டும். ஜனாதிபதியின் ஆதரவுடன் கிழக்கு பிரதேசத்தை முன்னேற்றுவதற்கு ஆவண செய்யப்படும்.
குறுகிய காலத்தினுள் கூடுதல் அபிவிருத்தி செய்வதே எனது இலக்காகும். என் மீது நம்பிக்கை வைத்தே ஜனாதிபதி என்னை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமித்துள்ளார். கிழக்கில் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் நம்பிக்கைபடி கிழக்கை முன்னேற்ற சகல வித நடவடிக்கையும் எடுக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
தன்னை முதலமைச்சராகத் தெரிவு செய்ய பங்களித்தவர்கள் வாக்களித்தவர்கள்இ ஒத்துழைப்பு வழங்கியவர்கள் அடங்கலான சகல தரப்பினருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment