தூது: ஜோர்டானில் தெற்கு நகரமான தஃப்லீகில் அரசு எதிர்ப்பாளர்கள் பிரம்மாண்ட கண்டன பேரணியை நடத்தினர். மன்னர் அப்துல்லாஹ்-II மற்றும் கலவர தடுப்பு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர். போலீஸ் அத்துமீறும் வரை பேரணி அமைதியாக நடந்ததாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மன்னருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய பொழுது போலீசார் தாக்கியதாக பேரணியில் பங்கேற்ற பாதி ஆபிதீன் கூறுகிறார்.
அரசை கவிழ்க்க முயற்சி, கலவரத்தை தூண்டியது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடந்த பேரணியில் ராணி ரானியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார் என குற்றம் சாட்டி பிரமுகரான முஹம்மது அல் அமாராவை போலீஸ் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்தது. வெள்ளிக்கிழமை ஜோர்டானின் 12 மாகாணங்களில் 9 இலும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தேறின. எரிபொருள், தண்ணீர் ஆகியவற்றிற்கு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் பிரதமர் பாயிஸ் தரவ்னி ராஜினாமாச் செய்யக் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment