Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

தண்ணீர்க் காப்போம்


சுவை இல்லை, மணமில்லை, நிறமில்லை -
நீயில்லை என்றால் எதுவும் இங்கே
பிறப்பதும் இல்லை,
உயிர்ப்தும் இல்லை !
கடலும் வானமும்
கருக் கொண்ட காதலால்
மழை என்ற உருக் கொண்டு
ஓடி வந்த மழலை தானே நீ?
அசிங்கப் பட்டுப் போயிருக்கும்
அகிலத்தின் கறைப் பட்டு
சிசுக்கொலை செய்யப்பட்ட
செல்வம் நீ !
முக்கால் பாகம் நீயிருந்தென்ன
நாக்கால் நக்க இல்லாமல் போனால்
மூக்கால் அழுது
முடிந்துப் போகும் பூமி !
வானத்தில் இருந்து விழும் உனை அள்ள
கிண்ணத்தை ஏந்தி கிறுக்குப் பிடித்ததோட
மானுடத்தை சபிப்பாயோ
மழைத்துளியே ?
ஆறு, குளம், கடலென்று
நீயிருக்கும் இடமெல்லாம்-பாவிகள்
நீதி பேசி அடித்துக் கொள்வதால்
சினம் கொண்டு வற்றிப் போவாயா சீதேவியே ?
தின்ன தீனி இன்றி
தெருவெல்லாம் அலைவது போல்
தண்ணீர்ப் பிச்சை எடுக்க தரணிக்கு
தண்டனை தந்துப் போவாயா தண்ணீர்த் தாயே ?
சொல்லி சொல்லிக் கேட்காத கோபத்தால்
சல்லிக் காசுக்கும் மதிக்காத மானுடத்தை
அள்ளிப் போக
சுனாமியாய் சீறினா(வா)யோ ?
எத்தனை சொல்லியும் புத்தியில் எடுக்கவில்லை;
அதனால் - அத்துணை துயரமும்
உனக்குள்ளே புதைத்துக் கொண்டு
பனி மலையாய் உறைந்துப் போ(வா)னாயோ ?
சீர் நீர் காக்க
சிரத்தை இல்லாமல் இருப்பதால்
உயிர் பிழைக்க சிறு நீர் குடிக்க
உத்தரவிட்டுப் போவாயோ ?
நிலாவிலும் செவ்வாயிலும் நீயிருக்க சேதி கேட்டு
சந்தோஷ துள்ளல் துள்ளும் மதிக்கெட்ட மானுடமே
புவியின் புதையலை காக்க
புத்திக் கெட்டுப் போவதேனோ?
தண்ணீரை காக்கத் தெரியாமல் போனால்
கண்ணீரை வடித்து செந்நீரை சிந்தும்
மாயுத்தம் வருமென்று
மானுடமே எச்சரிக்கின்றேன் !

No comments:

Post a Comment