Search This Blog

Pages

Monday, September 10, 2012

அரசுடன் இணைகிறது மு.கா???


SLMC may support to UPFA







முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைவதற்கான சம்மதத்தை மு.கா தலைவர் இன்று ஜனாதிபதியை சந்தித்த போது தெறிவித்ததாக உத்தியோக பூர்வற்ற தகவல்கள்(CP)  கிடைக்கப்பெறுகின்றது.
இன்று அலரி மாளிகையில் இடம் பெற்ற ஜனாதிபதி மற்றும் சுதந்திர கட்சி முக்கிய உருப்பினர்களுடனான சந்திப்பின் போதே இவர் தனது உறுதியான நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
எனினும் கட்சியின் இறுதி முடிவு இன்று இரவு இடம்பெறும் கூட்டதிதிலேயே எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளைஇ சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும்இ தேசிய சுதந்திர முன்னணியும் அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகள் என்பதால்இ கிழக்கில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படாது என்று அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
இம்முறை மக்கள் மத்தியிலுள்ள அரச எதிர்ப்பை வைத்தே வாக்கு வங்கியை நிரப்பிய மு.கா அரச எதிர்ப்பு வாக்குகளையும் அரசின் பக்கம் இணைக்கும் நாடகத்தை அரங்கேற்றியதா???
அரசின் பள்ளிவாசல்கள் உடைப்பு தொடக்கம் எல்லையோரக் கிராம முஸ்லீம்களின் காணிகள் பெரும்பான்மையினரால் அபகரிக்கப்படல்இதீகவாபி வீடமைப்புத் திட்ட பிரச்சினை , தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அமைப்பு , யாழ் முஸ்லீம்களின் இன்றும் அகதி நிலை வாழ்க்கை என்று தொடர்ந்து செல்லும் கொள்கைகளை விமர்சித்து வாக்குகளை பெற்ற மு.கா இவற்றை மறந்துவிட்டதா??
பொறுத்திறுந்து பார்ப்போம் மு.கா அரசுடன் இணைவதற்கு வைக்கப்போகும் நிபந்தனை வெறுமனே அமைச்சுப் பதவிகளா?? அல்லது முஸ்லீம்களின் உரிமைகளா??

No comments:

Post a Comment