பாகிஸ்தானின் மிகப் பெரும் நகரான கராச்சியில் உள்ள ஜவுளித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 246 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தீயில் இருந்து தப்புவதற்காக மாடியில் இருந்து பலர் குதித்துள்ளனர். வேறு சிலர் கதவுகளில் தொங்கியபடி இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐன்னல் கதவுகள் இரும்பு கம்பிகளால் அடைக்கப்பட்டிருந்த்ததால் தீயில் இருந்து பலரால் தப்ப முடியவில்லை. அந்த கட்டிடத்தில் தீ விபத்து பாதுகாப்பு பொறிமுறைகள் இல்லை.
சுமார் 40 தீ அணைப்பு வண்டிகள் இரவு முழுதும் போராடி தீயை அணைத்தன. கடந்த பத்து ஆண்டுகளில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான விபத்து இது என்று கருதப்படுகிறது.
செவ்வாய்கிழமை லாகூரில் இடம்பெற்ற மற்றொறு தீ விபத்தில் 25 பேர் பலியானார்கள்.
No comments:
Post a Comment