2011ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி ஏற்பட்ட இசெட் புள்ளி பிரச்சனைக்கு தீர்வாக 5,609 மாணவர்களை மேலதிகமாக நடப்பு ஆண்டில் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளும் படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழமையாக ஒவ்வொரு ஆண்டிலும் 21,500 மாணவர்கள் நடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களிற்கு அனுமதிக்கப்படுவர்.
2011ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களது இசெட் புள்ளி பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை ஆராய்ந்து உரிய தீர்வினை முன்வைக்கும் படி நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் அணைக்குழு 3 தீர்வினை முன்வைத்திருந்தது.
இவற்றில் ஒன்று பல்கலைக்கழகங்களிற்கு மேலதிகமாக மாணவர்களை உள்வாங்குவது ஆகும்.
No comments:
Post a Comment