விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துபவர்கள் அப்பிளிக்கேசன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்காக டெக்ஸ்டாப்பில் காணப்படும் சார்ட்கட்களை பயன்படுத்துவார்கள்.
எனினும் இதனை விட வேறு சில வழிகள் மூலமாகவும் இவ்வசதியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் அடிப்படையில் முதலாவதாக விண்டோஸ் 7 இயங்குதளத்தினைப் பயன்படுத்துபவர்கள் டாஸ்க்பாரில் சார்ட்கட்களை உருவாக்கிக் கொள்ள முடிவதுடன், அவற்றினை WinKey+1 ஐ பயன்படுத்துவதன் மூலம் டாஸ்க்பாரில் காணப்படும் முதலாவது புரோகிராமினையும், WinKey+2 ஐப் பயன்படுத்துவதன் மூலம் இரண்டாவது புரோகிராம் என்றவாறு ஓப்பின் செய்ய முடியும்.
இரண்டாவது முறையாக start மெனுவினை WinKey இனைப் பயன்படுத்தி செயற்படச் செய்ததும் தோன்றும் search எனும் பகுதியில் தேவையான புரோகிராமின் பெயரின் சில எழுத்துக்களை டைப் செய்து Enter செய்வதன் மூலம் ஓப்பின் செய்ய முடியும்.
மேலும் சார்ட் கட் கீக்களை உருவாக்குவதன் மூலமும் விரைவான செயற்பாட்டை மேற்கொள்ள முடியும்.
அதாவது குறிப்பிட்ட ஒரு புரோகிராமின் மீது Right Click செய்து தோன்றும் மெனுவில் Properties எனும் பகுதிக்கு சென்று அங்கு காணப்படும் Shortcut Key எனும் பகுதியில் சார்ட் கட் கீயினை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இவை தவிர Run Dialog இனைப் பயன்படுத்துவதன் மூலமும் இவ்வசதியினைப் பெற்றுக் கொள்ள முடியும். அதாவது WinKey+R ஆகிய கீக்களை அழுத்துவதன் மூலம் தோன்றும் Run Dialog Box இனுள் புரோகிராமின் பெயரை டைப் செய்து OK பொத்தானை அழுத்தியதும் குறித்த புரோகிராம் ஓப்பின் ஆகிவிடும்.
|
Tuesday, September 11, 2012
விண்டோஸ் அப்ளிக்கேசன்களை விரைவாக ஓப்பன் செய்வதற்கான சில வழிகள்
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment