பொழுது போக்கு சாதனங்களில் ஒன்றாக விளங்கும் இலத்திரனியல் கேம் சாதனங்களை பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தியவாறு அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளன.
இக்காலகட்டத்தில் PlayMG நிறுவனமானது தற்போது பிரபலமாகிவரும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கேமிங் சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
4 அங்குல தொடுதிரையினைக் கொண்ட இலகுவானதும், கவர்ச்சியானதுமான பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதுடன் Wi-Fi வசதியையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
இப்புதிய அம்சங்களின் காரணமாக குறித்த கேமிங் சாதனமானது கேம் பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பதாக PlayMG நிறுவனம் தெரிவித்துள்ளது.
|
Tuesday, September 11, 2012
அன்ரோயிட்டினை அடிப்படையாகக் கொண்ட கேமிங் சாதனம் அறிமுகம்
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment