கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியை அமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை வழங்குமென்றும் ஜனாதிபதி திடமான நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை நடை பெற்ற அரச நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் உரை யாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது அரசின் மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்தும் இருப்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இங்கு கருத்து வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மட்டந்தட்டி சில சக்திகள் செயற்பட்டதாக இங்கு விசனம் வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், மு.கா. இனவாதத்தைத் தூண்டுவதாகவும், மதவாதத்தைத் தூண்டுவதாகவும் மேற்கொள்ளப்பட்ட விஷமப் பிரசாரங்களுக்கு தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்களென்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து கட்சியில் அனைத்து மட்டத்துடனும் பேச்சு நடத்தி பின்னர் இறுதி முடிவைத் தெரிவிக்கவிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் இங்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் உச்சிமாநாட்டின் அமர்வுகளில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி இந்தக் கூட்டத்தின்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment