கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார் என உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. தனது நீதியமைச்சுக்குப் பதிலாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினை தனக்கு வழங்குதல்
2. வெளிவிவகார பிரிதியமைச்சுப் பொறுப்பைத் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குதல்.
3. தனது கட்சியைச் சேர்ந்த நால்வருக்கு உயர்ஸ்தானிகர் பதவிகளை வழங்குதல்.
போன்ற முக்கிய கோரிக்கைகளையும் ஹக்கீம் முன்வைத்துள்ளார் என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment