நற்பிட்டிமுனை றியாஸ்
நடைபெற்று முடிந்த மாகான சபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிககும் கடசியாக மாறியிருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் முஸ்லீம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும், அரசாங்கத்திற்கே என்ற பரவலான செயதிகளும் நிலவுகின்றன.
நடைபெற்று முடிந்த மாகான சபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிககும் கடசியாக மாறியிருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் முஸ்லீம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும், அரசாங்கத்திற்கே என்ற பரவலான செயதிகளும் நிலவுகின்றன. இந்நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் அரசுடன் இணையுமாக இருக்குமானால் அதற்கான காரணங்கள் எதுவாக இருக்களாம் என பார்போம்.
அந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைப்பதனைவிடவும் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பதனையே முஸ்லீம் காங்கிரஸ் பெரும்பாலும் விரும்பும் என எதிர்பார்கப்படுகிரது. துற்ப்போது நிலமையும் அவ:வாறே காணப்படுகிறது.
ஏனெனில் ஒரு பிராந்திய அரசியலுக்காக ஒரு தேசிய அரசியலை முஸ்லீம் காங்கிரஸ் வெறுத்தொதுக்க எண்ணாது. மேரும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கிழக்கில் இணைந்து முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடிவெடுக்குமானால் மத்திய அரசியலில் இருந்து வெளியேரவேண்டி ஏற்படும். இதனால் முஸ்லீம் காங்கிரஸ் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திடம் பறிகொடுத்து, முPண்டும் கட்சி பிழவு பட்டு போகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகையால் இதனையும் முஸ்லீம் காங்கிரஸ் விரும்பாது.
கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்தாலும், முஸ்லீம் முதலமைச்சர் முஸ்லீம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்டாலும் ஆளுனர் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒருவராக இருப்பதினாலலும் நிருவாக ரீதியாக ஆளுனரிடையே இருதி கையொப்பமிடும் அதிகாரம் இருப்பதினாலும் மாகான ஆட்சியில் நிறுவாக முறண்பாடுகள் அதிகம் ஏற்படலாம். உதாரணமாக 2002ல் ஜனாதிபதியாக சந்திரிகா அம்மையாரும், பிரதமராக ரணில் விக்கிரம சிங்கவும் இருந்தபோது ஏற்பட்ட நிருவாக பிரச்சினையை போன்று அமையும். இதனால் முஸ்லீம் காங்கிரஸ் அரசுடக் சார்ந்திருக்கவே விரும்பும்.
முஸ்லீம் காங்கிரஸின் எதிரிகளுக்கு முஸ்லீம் மக்களிடையே ஆதாரவில்லை என்பதனை அரசிற்கு உணர்தவே முஸ்லீம் காங்கிரஸ் இத்தேர்தலில் தனித்து களமிறங்கியது. அதனை நிரூபித்து காட்டிய முஸ்லீம் காங்கிரஸ், அரசில் இருந்துகொண்டே தளது கைகளை ஓங்கச் செயவதனூடாக தமது அரசியல் எதிரிகளை ஓரங்கட்டுவதற்கும் ஒடுக்குவதற்குமான ஒரு சந்தற்பமாக இதனை முஸ்லீம் காங்கிரஸ் பயன்படுத்தலாம். அதற்க்காக வேண்டியும் முஸ்லீம் காங்கிரஸ் அரசிற்க்கு ஆதரவு வளங்களாம் என எதிற்பார்கப்படுகிறது.
மேலும் கூட்டமைப்புடன் ஆட்சிப்பங்காளியாகின்ற போது முஸ்லீம் காங்கிரஸின் அடுத்த கட்ட அரசியலை செப்பனிடமுடியாமல் போகும். முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் எதிரிகள் அனைவரும் ஒன்றினைந்து புலிகளின் சகபாடிகளுக்கு முஸ்லீம் காங்கிரஸ் துணைபோய்விட்டது என்ற பலத்த விமர்சனங்களை எதிர்காலத்தில் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். இதன்மூலம் ஏனய முஸ்லீம் கட்சிகள் தம் செல்வாக்கினை அதிகரித்துகொள்ள முயற்சிக்களாம். இதற்க்கு முஸ்லீம் காங்கிரஸ் ஒரு போதும் விரும்பாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் எதிரிகள் என்பதினை தெடர்ந்தும் பேணிவருகின்ற இந்நிலையில் முஸ்லீம்களையும் அவ்வாரு மாற்றுவதினூடாக தாம் நினைத்ததினை சர்வதேசத்தினூடாக அடைந்துகொள்வதற்க்கு ஏணியாக முஸ்லீம் காங்கிரஸினை பாவிப்பதற்கு முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் விரும்பாது.
வடகிழக்கிற்கு வெளியே வாழுகின்ற 3/2 பங்கு மு;லீம்களுக்கும் முஸ்லீம் காங்கிரஸ்தான் அவர்களுக்கு பாதிப்பும்வரமல் முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானங்களை எடுத்தல் அவசியம். இதற்காக வேண்டியும் முஸ்லீம் காங்கிரஸ் அரசிற்கு ஆதரவு வளங்க முன்வரலாம்.
பாராளுமன்றம் மூலமோ , மூன்றாம் தரப்பு மூலமோ கூட்டமைப்பினை அழைத்து அவர்களுக்கான தீர்வினை அரசு பெற்றுக்கொடுக்க முனைகின்ற போது, அரசாங்கம் முஸ்லீம் காங்கிரஸினை கரந்தாலோசிக்காமல் ஏனைய முஸ்லீம் கட்சிகளை அளைக்கலாம். இது முஸ்லீம் காங்கிரஸிற்கு பேரிழப்பாக அமையலாம். அதே வேளை கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரஸினை இணைத்துக்கோண்டு பேச்சுவார்தைக்கு செல்லாது. மாறாக தமிழர்களுக்கான தீர்வை அரசாங்கம் தரட்டும் அதில் இருந்து ஏதவதை நாங்கள் உங்களுக்கு தருகிறோம் என முஸ்லீம் காங்கிரஸ் ஏமாற்றப்படலாம். இதனையும் முஸ்லீம் காங்கிரஸ் விரும்பாது. a
எnவேதான் தமிழ் தேசிய கூட்டமைப்புடைய தேவையை தீர்பதற்காகவும், அரசாங்கத்தினை சர்வதேச அரங்கில் அழுத்தத்திற்குள்ளாக்குவுதற்கும் , முஸ்லீம் மக்களை அரசின் எதிரியாகவும், சிங்கள மக்களின் எதிரியாகவும் காட்டிவிட்டு முஸ்லீம் காங்கிரஸினை நட்டாற்றில் விடவும், எடுக்கப்படுகின்ற சதிமுயற்ச்சிகளை முஸ்லீம் காங்கிரஸ் கருதத்தில் கொண்டே தனது தீர்மானங்களை எடுக்கும். அதன் அடிப்படையில் பாற்க்கும் போது அரசின் பக்கம் சேர்வதற்கான அறிகுறிகளே அதிகம் காணப்படுகின்றது. இருந்தாலும் பொருத்திருந்து பார்போம்.
No comments:
Post a Comment