கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தத் தரப்புக்கு ஆதரவ வழங்குதல் தொடர்பான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டம் எவ்விதத் தீர்மானமும் இன்றி நிறைவடைந்துள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி தொடக்கம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்று இக்கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் முடிவுற்றது.
நாளை காலை 7 மணிக்கும் மீண்டும் இக்கூட்டம் கூடி தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
மு.கா விற்கு கிடைக்கப்பெறும் முதலமைச்சர் பதவி ஜெமீல் இற்கு கொடுப்பதற்கு அதிக ஆதரவு இருப்பதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றது
இக்கூட்டத்தில் கட்சியின் தவிசாளர், செயலாளர் நாயகம் உட்பட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும்இ கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு உறுப்பினர்கள் உட்பட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தங்கியிருக்கின்றது. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாரிய விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்’ என இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனது இல்லத்தில் கிழக்கு மாகாண சபைக்கு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 11 தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பில் சம்பந்தன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment