நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையினை பெறாத நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும் கைப்பற்றிக் கொண்டுள்ளது.
இதற்க அடுத்த படியாக முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களுடன் மூன்றாம் இடத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களுடனும் தேசிய சுதந்திர முன்னனி 1 ஆசனங்களுடனும் இருக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் தற்போது தனது தனித்துவத்தை கிழக்கில் மிண்டும் ஒரு முறை நிறுபித்து ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
இம்முறை முதலாவது தடவையாக களமிறங்கிய தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் அதிக ஆதரவைப் பெற்ற கட்சி என்று சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளது.
No comments:
Post a Comment