Search This Blog

Pages

Saturday, September 8, 2012

தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு முன் அறிவிக்கப்படும் : தேர்தல் செயலகம்

vote counting
நடந்து முடிந்த கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமானதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 4 மணிக்கு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, தபால் மூல வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இன்று இரவு 10 மணியளவில் முதல் தபால் மூல முடிவை வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று மாகாணங்களிலும் 50-60 சதவீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment