Search This Blog

Pages

Wednesday, September 12, 2012

அரசை ஆதரித்தால் கிழக்கில் நடக்கப்போவது இப்போது தெரணியகலயில்!


theaniyahale
கிழக்கில் மு.கா அரசை நிபந்தனைகள் இன்றி ஆதரிக்குமாக இருந்தால் கிழக்கு மக்களுக்கு கிடைக்கப்போகும் நிலைக்கு தெரணியகல நில ஆக்கிரமிப்பு ஒரு நல்ல உதாரணமாகும்.
கேகாலை மாவட்டம் தெரணியகலை தொகுதியைச் சேர்ந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பெருவாரியாக வாழும் மாலிபொட தோட்டத்தில் பெரும்பாண்மை இனத்தவர்கள் அத்துமீறி பிரவேசித்து தோட்ட நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதாக தொழிலாளர்கள் தெரணியகலை ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பணிமனையில் தொழிற்சங்க பொருப்பாளர் ஆர். மேகநாதனிடம் முறையிட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்தார்.
இது குறித்து ஜனநாயக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
ஏற்கனவே பல பெரும்பாண்மை இனத்தைச் சார்ந்தவர்கள் இத்தோட்டத்திற்குள் பிரவேசித்து நிலங்களை ஆக்கிரமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் இம்முறை பெருவாரியான பெரும்பான்மை இனத்தவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள நிலங்களை ஆக்கிரமித்ததை தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்தின் மூலம் பொலிஸாரிடம் முறையிட்டும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் அப்பகுதியிலுள்ள ஆளும் அரசாங்க தரப்பு அரசியல் வாதிகளே என அறியமுடிகிறது.
இது இவ்விததம் இருக்க கடந்த திங்கட்கிழமை முதல் நடவடிக்கை எடுக்ககோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனின் கவனத்திற் கொண்டுவரப்பட்டு உடனடியாக கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி குமாரசிறியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இது சம்பந்தமாக எமது தொழிற்சங்க பொறுப்பாளர் ஆர்.மேகநாதன் பெருந்தோட்ட தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு அனுப்பிய கடிதத்திற்கும் உடனடி நடிவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.
அரசுடனே மு.கா இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள நிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கும் இதுபோன்ற உரிமைப் பிரச்சினைகளுக்கு மு.கா முன்வைக்கப்போகும் நிபந்தனைகள் என்ன? வெறுமனே அதிகாரங்கள் அற்ற பதவிகளா? அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகளா?

No comments:

Post a Comment