Search This Blog

Pages

Sunday, September 9, 2012

வெற்றிக் களிப்பில் வீரர்கள் :விட்டுவிடுவார்களா எம் கரங்களை???


Which-way
அரசாங்கத்தை விமர்சித்தே அரைவாசி வாக்குகளை பெற்றுக் கொண்டிருக்குக்கும் மு.கா தற்போது கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மீண்டுமொருமுறை தலை நிமிர்ந்து நிற்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் மு.கா எடுக்கப் போகும் முடிவே கிழக்கின் ஆட்சியை மடடுமல்ல இலங்கை வாழ் முஸ்லீம்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றது. எப்பாடு பட்டாவது ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயாத்தில் பெரும்பான்மை வாக்குகளை கைப்பற்றிய இரண்டு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.
ஒரு புரம் கிழக்கின் உதயம்,யுத்த வெற்றி, வட கிழக்கு பிரிப்பு என்பவற்றில் கிழக்கு மக்கள் அரசின் பக்கம் இருக்கின்றார்கள் என்று சர்வதேசத்திற்கு காட்ட வேண்டிய நிலைக்கு அரசும் வட கிழக்கு பிரிப்பு தமிழ் மக்கள் விரும்பவில்லை ,இந்த அரசின் செயற்பாடுகள் தமிழ் மக்களை திருப்திப் படுத்தவில்லை , நாங்களே வட கிழக்கின் ஏக போக பிரதிநிதிகள் என்ற வாதங்களை சர்வதேசத்திற்கு முன்வைப்பதற்கு மட்டுமன்றி அரசு தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வில்லை அதனால் தான் மக்கள் எம்மை தெரிவு செய்துள்ளனர் என்ற கருத்தை உருதிப்படுத்துவதற்கும் தமிழசுக் கட்சி எப்பாடுபட்டாவது ஆட்சியமைக்க தயாராக உள்ளனர் முதலமைச்சர் பதவியை கூட மு.கா விற்கு விட்டுக்கொடுக்க தயார் என சம்பந்தன் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறு இறுக்கும் நிலையில் இந்த அரசின் பள்ளிவாசல்கள் உடைப்பு தொடக்கம் எல்லையோரக் கிராம முஸ்லீம்களின் காணிகள் பெரும்பான்மையினரால் அபகரிக்கப்படல்,தீகவாபி வீடமைப்புத் திட்ட பிரச்சினை, தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அமைப்பு , யாழ் முஸ்லீம்களின் இன்றும் அகதி நிலை வாழ்க்கை என்று தொடர்ந்து செல்லும் கொள்கைகளை விமர்சித்து வாக்குகளை பெற்ற மு.கா இவற்றை நிபந்தனைகளாக வைத்து அரசுடன் இணையுமா? அல்லது முதலமைச்சர் பதவியை நிபந்தனையாக வைத்து கூட்டமைப்புடன் இணையுமா??
இவயனைத்திற்கும் அப்பால் வட கிழக்கு பிரிப்பை முஸ்லீம்கள் ஏற்றும் கொள்கின்றார்களா? இல்லையா என்ற கேள்விக்கான பதிலும் மு.கா வின் முடிவிலேயே தங்கியுள்ளது.
ஐ.தே கட்சி மற்றும் த.தே.கூ என்பன இணைந்து 15 ஆனங்களையும் அரசு மற்றும் அதன் கூட்டனி கட்சி இணைந்து 15 ஆனங்களையும் வைத்திருக்கும் நிலையில் மு.கா வின் முடிவிலேயே கிழக்கின் ஆட்சி தங்கியுள்ளது.
எனவே மு.கா தலைமை மக்கள் பக்கம் நின்று சரியான முடிவை எடுக்குமா? அல்லது பதவிகலுக்காக ஆசைப்பட்டு மண்டியிடுமா?? என்ற கேள்விக்கான பதிலை அறிய உங்களுடன் சேர்ந்து நாமும் ஆர்வத்துடன் இருக்கின்றோம்

No comments:

Post a Comment