கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியை உலகம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தீவுப்பகுதியில் கம்பீரமாக காட்சியளித்த உலக வர்த்தக மையத்தின் வடக்கு மற்றும் தென் பகுதியில் விமானத்தை கொண்டு தீவிரவாதிகள் தாக்கியதில், 2 மணி நேரத்தில் புகைமண்டலத்துக்கு இடையே 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரம் சரிந்தது. ஏறத்தாழ 3,000 பேர் வரை இச்சம்பவத்தில் உயிரிழந்தனர்.
அதன் 11வது நினைவு தின நிகழ்ச்சி இன்று இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் உள்ள நினைவிடமான, கிரவுண்ட் ஜீரோவில் நடைபெறுகிறது.
அழிப்பது எளிது, ஆக்குவது கடினம் என்பார்கள். ஆனால் இன்றுள்ள நவீன தொழில்நுட்பத்தில் ஆக்கலையும் எளிதாக்கி விட்டனர் அமெரிக்க கட்டிடக்கலை பொறியாளர்கள்.
நியூயார்க் நகரின் பெருமைமிக்க கட்டிடங்களில் ஒன்றாக திகழ்ந்த உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், முன்பிருந்ததை விட மிக நவீனமாக கிரவுண்ட் ஜீரோவுக்கு அருகிலேயே மீண்டும் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு நினைவு தினத்துக்குள் இந்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்டிடங்கள் இங்கு கட்டப்படுகின்றன.
3.8 பில்லியன் டொலர் செலவில் 104 மாடிகளுடன் கட்டப்படும் புதிய கட்டிடம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இரவு, பகலாக தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த புதிய கட்டிடம் வருங்காலத்தில் தீவிரவாதிகளின் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, கீழே சதுரமாக கட்டப்பட்டுள்ள கட்டிடம், மேலே செல்லும் போது தன் வடிவம் குறுகி கியூபிக்காக மாறிவிடும்.
கட்டிடத்தின் 100வது மாடியில் இருந்து 102 மாடி வரையில் கண்காணிப்பு அலுவலகங்கள் அமைய உள்ளன. இதன் மொத்த உயரம் 1,776 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்கட்டமாக உலக வர்த்தக மையத்தின் 4 அலுவலகங்கள் 72 மாடிகளில் அமைய உள்ளது. இது அடுத்த ஆண்டில் திறக்கப்பட உள்ளது. இதன் உயரம் மட்டும் 977 அடி.
|
Tuesday, September 11, 2012
இன்று செப்டம்பர் 11: உலக வர்த்தக மைய கட்டிடம் தகர்க்கப்பட்ட நாள்(வீடியோ இணைப்பு)
Labels:
Articles / News,
Other Videos
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment