கியூபா தலைநகர் ஹவானா உட்பட அதன் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரதான நகரங்களில் ஏற்பட்ட கடும் மின்வெட்டால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்கா உட்பட கியூபாவை தாக்கிச் சென்ற ஹரிக்கேன் சூறாவளியை அடுத்து அங்கு மின்வெட்டுக்கள் ஏற்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட மின் வெட்டு காரணமாக தலைநகர் ஹவானாவில் சில முக்கிய மருத்துவமனைகள் மற்றும் நாட்டின் பிரதான அரசு அலுவலகங்கள் ஜெனரேட்டர் மூலம் மின் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஏனைய இடங்களில் 95% வீதம் மின்வெட்டால் எங்கும் ஒரே இருட்டாகக் காணப்பட்டது.
மேலும் பொது மக்கள் பலர் இரவைக் கழிப்பதற்கு வீடுகளுக்கு வெளியே வந்து பாதைகளிலும் முற்றங்களிலும் நிலவொளியில் தமது நேரத்தைச் செலவவழித்தனர்.
கியூபாவின் தொழிற்சாலைகள் முடங்கி மில்லியன் டொலர்களுக்குச் சமனான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருப்பதற்கும் சேர்த்து விசாரணைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
|
Tuesday, September 11, 2012
ஹரிக்கேன் சூறாவளியின் தாக்கம்: இருளில் மூழ்கிய கியூபா
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment