Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

வந்துவிட்டது சிறப்பம்சங்களுடன் எம்.எஸ்.ஆபீஸ் 2013


microsoft-office-2013
அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில் பல்வேறு புதிய சிறப்புகள் மற்றும் வசதிகள் உள்ளன.
எக்ஸெல் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில் உள்ள வழக்கமான ரிப்பன் இன்டர்பேஸ் இதிலும் வழங்கப்படுகிறது.
வேர்ட் புரோகிராமில் இருப்பது போலவே இதிலும் சேவ்(Save) செய்து பதிவதில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
ஒன்லைன் ஸ்டோரேஜ், கோப்புகளை பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக கோப்புகளை அப்டேட் செய்து கொள்ள வசதிகள் உள்ளன.
எக்ஸெல் புரோகிராம் திறந்தவுடன், மாறா நிலையில் நமக்குக் கிடைக்கும் ஒர்க்ஷீட் புதிய டெம்ப்ளேட் விண்டோவில் கிடைக்கிறது.
அத்துடன் புதியதாக கணனிகளில் இருக்கும் டெம்ப்ளேட்களையும், ஒன்லைன் மூலமாக கிடைக்கக் கூடிய டெம்ப்ளேட்களையும் பட்டியலிடுகிறது.
ஒன்லைன் டெம்ப்ளேட் ஒன்றை தேர்ந்தெடுத்தால், தானாக அதனைத் தரவிறக்கம் செய்து தருகிறது. அத்துடன் நாம் அண்மையில் பயன்படுத்திய ஒர்க்ஷீட்களையும் பட்டியலிடுகிறது.
இதன் மூலம் அவற்றை போல்டரில் தேடாமல் நேரடியாகவே பெற்று பயன்படுத்தலாம். இந்த வசதிகள் உடனடியாக ஒர்க்ஷீட் பணிகளைத் தொடங்க எண்ணுபவருக்கு எளிதாக அமைந்துள்ளன.
வழக்கமாகக் கிடைத்துவரும் பகுப்பாய்வு வசதியில்(quick analysis tool) பல புதிய மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய ஆய்வு தேடல்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன.
ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைப் பலவகைகளில் போர்மட் செய்திட முடிகிறது. இதிலேயே தகவல்களை வகைப்படுத்தி குறைந்த மற்றும் அதிக மதிப்புகளை அவற்றின் அடிப்படையில் பட்டியலிட முடிகிறது.
நெட்டு வரிசை ஒன்றில் உள்ள தகவல்களை கர்சர் மூலம் தேர்ந்தெடுத்தால், அடுத்த வரிசையில் கூட்டல், சராசரி, மொத்த மதிப்புகளின் எண்ணிக்கை, மொத்த சராசரி ஆகியவை கிடைக்கும். இதில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் அது உடனே கருப்பு வண்ணத்தில் தெளிவாகப் பார்க்கக் கிடைக்கிறது.
இதில் தரப்படும் சார்ட்(Sort) தயாரிப்பதற்கான வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாம் எளிதாகவும் வேகமாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சார்ட்களை அமைக்கலாம். இதன் சிறப்பு என்னவெனில் ஒரு மதிப்பை மாற்றினால், உடனேயே அதற்கேற்ற வகையில் சார்ட் வேகமாக மாற்றப்படுகிறது.
இது போன்ற வசதிகள் மூலம் வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்வது, பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது போன்ற முடிவுகளை வேகமாக எடுக்க முடியும்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால் எக்ஸெல் தொகுப்பிலும் ஒன்லைன் இணைப்பு கிடைக்கிறது. மாறா நிலையில் ஒர்க்ஷீட்கள் ஒன்லைனில் சேவ் மற்றும் அப்டேட் செய்யப்படுகின்றன.
எக்ஸெல் தொகுப்பில் மட்டும் ஒரே நேரத்தில் பலர் ஒர்க்ஷீட் ஒன்றை எடிட் செய்திட வசதி தரப்படவில்லை. அப்படி முயற்சிக்கையில், பைல் லாக் செய்யப்பட்டிருப்பதாக எச்சரிக்கை செய்தி ஒன்று காட்டப்படுகிறது. இதனால் ஒருவர் எடிட் செய்து கொண்டிருக்கையில் அறியாமல் இன்னொருவர் எடிட் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இது நல்லது தான் என்றாலும், ஒருவர் எடிட் செய்கையில் மற்றவர்கள் அதனைத் திறந்து பார்ப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆபீஸ் தொகுப்பின் மற்ற புரோகிராம்களில் (வேர்ட், பிரசன்டேஷன் போன்றவற்றில்) இந்த வசதி தடை செய்யப்படவில்லை.
எனவே ஒருவர் எக்ஸெல் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்விக்கு, கூடுதல் வசதிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வேலையை எளிதாகவும், விரைவாகவும் முடிக்கக் கூடியவர்களும், இதனை விரும்புபவர்களும், நிச்சயம் புதிய தொகுப்பிற்கு மாறிக் கொள்ளலாம்.
குறிப்பாக கோப்புகளை ஒன்லைனில் சேவ் செய்து கொண்டு, மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தகவல்களைப் புதிய கோணத்தில் உடனுடக்குடன் ஆய்வு செய்து முடிவுகளைப் பெறுவது போன்ற வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் நிச்சயம் இதற்கு மாறிக் கொள்ளத் தான் வேண்டும்.

No comments:

Post a Comment