பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுதலிப்பதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.
மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக பதவிகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு அல்லது சிறைக்கு செல்லவும் தாம் தயார்
முடிந்தால் தம்மை பணி நீக்கம் செய்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சவால் விடுத்துள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரையில் பணிக்கு திரும்பப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அது பற்றி கவலைப்படப் போவதில்லை என சுமார் நான்காயிரம் பல்கலைக்கழக விரிவரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின்படி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் மீது தன்னார்வ மத்தியஸ்தத்தை தொழில் ஆணையாளர் விதித்துள்ளார். மத்தியஸ்தர் ஒருவரை நாளை புதன்கிழமை நியமிக்குமாறு அவர் இச்சம்மேளனத்தை கோரியுள்ளார்.

No comments:
Post a Comment