Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

சொந்தக் குரலில் பாடியுள்ள பவர் ஸ்டார்


தனது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக பவர் ஸ்டார் சொந்தக் குரலில் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் முன்னணி நாயகர்களோடு போட்டியிடுவதாக அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்த பவர் ஸ்டார், தற்போது முன்னணி நாயகர்களை பின்தள்ளி விட்டார்.
முன்னணி நாயகர்கள் தனுஷ், சிம்பு,விஜய் படங்களில் நடிப்பதோடு பாடல் பாடியும் அசத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதே போல் பவர் ஸ்டாரும் தனது சொந்தப் படமான இந்திரசேனாவுக்காக சொந்தக் குரலில் பாடியுள்ளாராம்.
இந்தப் பாடலை விரைவில் யுரியூப்பில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் சீனிவாசன்.
இன்றைய சூழலில் பல முக்கிய படங்கள் யு ரியூப்பை விளம்பர சாதனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.
எனவே தானும் அந்த யுத்தியைக் கையாளுவதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment