Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

முருகதாஸின் தம்பி படத்தில் நடித்த அஞ்சலி


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன் நாயகனாக அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.
கொலிவுட்டில் எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின்பு, அஞ்சலியின் மார்க்கெட் உயர்ந்து விட்டது.
பெரிய இயக்குநர்கள், பெரிய பட நிறுவனங்கள் என்றால் மட்டுமே உடனே நடிக்க வந்து விடுகிறார் அஞ்சலி.
இந்நிலையில் தனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த எங்கேயும் எப்போதும் படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டுக் கொண்டதற்காக அவருடைய தம்பி திலீபன் நாயகனாக அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொடுத்துள்ளாராம்.
படு வேகமாக இந்த காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதற்காக முழு திகதிகளையும் ஒதுக்கி நடித்து முடித்துக் கொடுத்து விட்டாராம் அஞ்சலி.
இப்படத்தில் மீனா என்ற பெயரில் வரும் அஞ்சலி, தனது கதாப்பாத்திம் குறித்த பிற தகவல்களை வெளியிட மறுத்து விட்டார்.

No comments:

Post a Comment