Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

கடலோர மக்கள் பிரச்சினைகளை மையமாக கொண்ட மரியான்


கொலிவுட்டில் காதலும், அதைச்சார்ந்த பிரச்சனைகளை மையமாக கொண்ட படங்களிலுமே அதிகளவில் நடித்துள்ளார் நடிகர் தனுஷ்.
இவர், முதன்முறையாக பரத்பாலா இயக்கத்தில் மரியான் படத்தின் நாயகனாக சமூகம் சார்ந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.
கடல், நீர்ப்பறவை படங்களில் கடற்கரையோர காதலர்கள் சம்பந்தப்பட்ட கதை படமாகி வருவது போல், கடற்கரையோர மக்கள் பிரச்சினைகளை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது மரியான்.
தமிழகம் மட்டுமன்றி சில வெளிநாட்டு கடற்கரை பகுதிகளிலும் படமாக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், தனுசுக்கு நண்பனாக மன்னாரு பட நாயகன் அப்புக்குட்டி நடித்துள்ளார்.
மேலும், தனுஷ் பாலிவுட் படம் மற்றும் சற்குணம் இயக்கத்தில் சொட்ட வாளக்குட்டி என்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

No comments:

Post a Comment