Search This Blog

Pages

Saturday, September 8, 2012

ராஜதந்திர வரப்பிரசாதம் காரணமாக ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

president1
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிமீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ரமேஷின் மனைவி வத்சலாதேவி ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
ஜனாதிபதிக்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாகவும் இதனால் வழக்கைத் தொடர முடியாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி அமெரிக்க நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
ராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதனால் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும் இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதவான் நயோமி புச்வால்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொடரப்படும் வழக்குகளின் போது நாடுகளின் தலைவர்களுக்கு இராஜதந்திர வரப்பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாகவும், இது நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஓர் நடைமுறை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment