Search This Blog

Pages

Saturday, September 8, 2012

ஹக்கீமிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் அதி உயர் பீடம் தீர்மானம்..?


Sri-Lankan-Minister-of-Justice-Rauff-Hakeem-speaks-during-a-press-conference-in-Colombo-on-April-30-2012-PHOTO-AFP
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக கட்சியின் அதி உயர் பீடம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் அசன் அலி உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைக்க உள்ளனர்.
கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி ஹக்கீம் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலின் போது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஆளும் கட்சியினர் பிரயோகித்த அழுத்தங்களுக்கு, கட்சித் தலைவர் உரிய பதிலடி கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே ஆளும் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்காது ஹக்கீம் மௌனம் சாதித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் யாப்பு விதிகளில் சந்தர்ப்பம் காணப்படுவதாக சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment