58 ஆவது பொதுநலவாய பாராளுமன்ற பிரதான மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயகம் சவாலை எதிர்நோக்கி வருகிறதென முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இத்தேர்தல் மூலம் உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மூன்று மாகாணங்களில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்ட வண்ணம் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு தங்களுடை பிரதிநிதிகளை சுயாதீனமாக தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று அடுத்து வருடம் வடக்கில் தேர்தல் நடத்தி வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து அவர்களது பிரதிநிதிகளை அவர்களே தெரிவு செய்து கொள்ளும் வண்ணம் வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முப்பது வருட கால யுத்தத்தில் இருந்து மீண்டு நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அபிவிருத்தி பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகள் கண்கூடாக அவதானிக்க முடியும் என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment