வடக்கிலும்–கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் ராஜ்ஜியங்கள் உருவாகும் அபாயகரமான சூழ்நிலை கிழக்கு மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளால் உருவாகியுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதின்மூன்றாவது திருத்தத்தை இரத்துச் செய்யாததன் பலனை இன்று அனுபவிக்க நேர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்தால் நாட்டில் பயங்காரமான சூழ்நிலை உருவாகும்.
கிழக்கில் ஒலுவில் மற்றும் அதனோடிணைந்த முஸ்லிம் பிரதேசங்கள் இணைந்து முஸ்லிம் ராஜ்ஜியம் உருவாகும். அதேபோன்று கிழக்கில் தமிழ் பிரதேசங்களும் வடபகுதியும் இணைந்து தமிழ் ராஜ்ஜியமும் உருவாகும். இவ்வாறான அபாயகரமான நிலைமை உருவாவதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும்.
ஏனென்றால் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து அதிகாரப் பரவலாக்களை இல்லாதொழிக்கவே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவால் ௭ம் மீது பலாத்காரமாக சுமத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யாது. அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக் கொண்டது. இன்று 13 இன் விசுவரூபம் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. மக்கள் கேட்டதை வழங்காது கேட்காததை நிறைவேற்றிக் கொண்டதன் ‘‘பாவம்’’ ௭ம்மை பாம்பாக சுற்றிக் கொண்டுள்ளது.
இந்தியா, கூட்டமைப்பையும்– முஸ்லிம் காங்கிரஸையும் இணைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். ஏனென்றால் கிழக்கில் இந்தியாவால் ஆட்டுவிக்கக் கூடிய ஆட்சியையே அது விரும்பும். ௭னவே அரசாங்கம் இவ்விடயத்தில் மிக உன்னிப்பாக செயற்பட வேண்டும் ௭ன்றார்
No comments:
Post a Comment