மடிகணனியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். மொக்ரிட்ஜ் உயிரிழக்கும் போது அவரின் வயது 69.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோயின் தீவிரம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போதும் நோயின் தீவிரம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த பில் மொக்ரிட்ஜ் லண்டனில் உள்ள சென்ட்ரல் ஸ்கூல் ஒப் டிசைனில் பட்டப் படிப்பை முடித்தார். தலைசிறந்த கணினி வடிவமைப்பாளராக விளங்கிய மாக்ரிட்ஜ், அங்குள்ள ரோயல் கொலேஜ் ஒப் ஆர்ட்ஸ்சில் பேராசிரியாகவும் பணியாற்றினார்.
அவர் லண்டனில் கடந்த 1969ல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். கிரிட் கொம்பஸ் (Grid Compass) என்ற பெயரில் 1979-ல் முதல் மடிகணினியை உருவாக்கினார்.
அப்போது இதன் விலை 8,150 அமெரிக்க டொலர்களாகும்.
இதில் இன்டெல்லின் 8086 புரசசர் உபயோகப்படுத்தப்பட்டிருந்ததுடன் 320 × 240-pixel மஞ்சள் மற்றும் கறுப்பு திரை பயன்படுத்தப்பட்டிருந்ததுடன் 340 கிலோபைட் மெக்னடிக் பபிள் மெமரியையும் கொண்டிருந்தது.
முதலில் இது அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதுடன் பின்னர், 1985-ல் ஏவப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் பயன்படுத்தப்பட்டது.
மேலும் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் அமெரிக்காவில் குடியேறிய அவர், நியூயார்க் நகரில் கூப்பர் ஹெவிட் தேசிய வடிவமைப்பு அருங்காட்சியகத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார். 2010 வரை இப்பதவியில் இருந்த அவர் பின்னர் புற்றுநோய் பாதிப்பினால் அதிலிருந்து விலகினார்.
நோயின் தீவிரம் அதிகரிக்கவே கடந்த சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று அவர் மரணமடைந்தார்.
No comments:
Post a Comment