Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

சுந்தரபாண்டியன் படத்திற்கும் சிக்கல்


இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில் அவரது உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் சுந்தரபாண்டியன்.
இதில் நாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முடிந்து விட்ட நிலையில் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் கார்த்திக் நடித்த ஒரு படமும் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் இருந்தது. ஜூபிடர் பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. ஆர்.ரகு என்பவர் இயக்கியுள்ளார்.
சுந்தர பாண்டியன் தலைப்பு எங்களிடம்தான் உள்ளது. பல வருடத்துக்கு முன்பே அந்த தலைப்பை வைத்துவிட்டோம் என்று ஜூபிடர் பிலிம்ஸ் தரப்பிலும், தலைப்பை அவர்கள் மறுபதிவு செய்யாததால் அது காலாவதியாகிவிட்டது.
அந்த தலைப்பு யாரும் பதிவு செய்யவில்லை என்று உறுதி செய்த பிறகே நாங்கள் படத்துக்கு சுந்தர பாண்டியன் என்று தலைப்பு வைத்தோம் என்று சசிகுமார் தரப்பிலும் கூறப்படுகிறது.
பிரச்சினை இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தது. தற்போது ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் படத்தின் தலைப்பிற்காக வழக்கு தொடர்ந்துள்ளது.

No comments:

Post a Comment