கொலிவுட்டில் பாரதி, ஆட்டோகிராப், மொழி, சிவகாசி, அனந்தபுரத்து வீடு என்று முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இ.வி.கணேஷ் பாபு. |
நாடகம், நடிப்பு கலைகளில் பலரின் பாராட்டைப் பெற்ற இவர், ஸ்ரீஹரி பாலாஜி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் “யமுனா” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். இப்படத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற சத்யா என்பவர் இதில் நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் '1940 லோ ஒக்ககிராமம்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற ஸ்ரீரம்யா 'யமுனா'வில் நாயகியாக வருகிறார். முதல் படத்திலேயே துணிச்சலாக மொட்டையடித்து நடித்து, ஆந்திராவின் 'நந்தி' விருதை தட்டி சென்றவர் இவர். படத்தில் பாலா சிங், 'எங்கேயும் எப்போதும்' வினோதினி, நரேன், சாம்ஸ். செந்தி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். படம் குறித்து இயக்குனர் கணேஷ் கூறுகையில், இன்றைய சமூக அவலம் தான் இப்படத்தின் கதைக்கரு. வாழ்க்கையில் அடிப்படை, அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காத நிலையில் அதிகாரத்தின் முன் மண்டியிட்டு நிற்கிறார்கள். இவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நபர்களிடம் சாயவும் தயாராக இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை. அந்த மக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது ஒரு கும்பல். இதனையடுத்து சமூக நல யுத்தத்தில் படத்தின் நாயகன் இறங்குகிறார் என்றும் கொமெடி, கமெர்சியல் அம்சங்களோடு ஜனரஞ்சகமான படமாக உருவாக்கியுள்ளோம் எனவும் கூறியுள்ளார். |
Tuesday, September 11, 2012
கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான ''யமுனா''
Labels:
Articles / News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment