Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

நண்பனுக்காக ஆடிய சிம்பு


கொலிவுட்டில் சிம்புவின் நண்பர் சந்தானம் நடித்து தயாரித்து வரும் படத்தில் சிம்பு பாடல் ஒன்றுக்கு ஆடியுள்ளார்.
சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடிப்பதுடன் தயாரித்தும் வருகின்றார்.
சந்தானம், பவர் ஸ்டார் கூட்டணியில் முழு நீள கொமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக விசாகா நடிக்கிறார். தமன் இசையமைக்க, மணிகண்டன் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தில் தனது நண்பர் சிம்பு ஆடினால் நன்றாக இருக்கும் என தனது விருப்பத்தை சந்தானம் சிம்புவிடம் கூறியிருக்கிறார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த சிம்பு, ஒரு பாடலுக்கு ஆடியும் இருக்கிறார்.
இப்பாடல் சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment