நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட சகல சுயேச்சை குழுக்களும் தமது கட்டுப்பணங்களை இழந்துள்ளன.
அவர்களினால் கட்டப்பட்ட கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபை தேர்தலில் 86 சுயேச்சை குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 454 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இவர்கள் தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் இவர்களினால் செலுத்தப்பட்ட 30 லட்சம் ரூபா கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment