Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

மிருக பலி பூஜையை நிறுத்துமாறு கூறும் அதிகாரம் கிடையாது: நீதவான்



முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் மிருக பலி பூஜை வழிபாடுகளை நிறுத்துமாறு ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கூடிய அதிகாரம் கிடையாது என சிலாபம் மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளார்.
மிருக பலி பூஜையை தடுத்து நிறுத்துமாறு கோரி பொலிஸார் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதவான் தெரிவித்துள்ளார்.
காளி கோயில் மிருக பலி பூஜையை தடத்து நிறுத்துமாறு, துன்ஹெல ஜாதிக வியாபாரய என்னும் அமைப்பின் பொதுச் செயலலாளர் ஒமல்பே காசிப்ப தேரர் பொலிஸாரிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் பொலிஸார் நீதிமன்றில் தடையுத்தரவினை கோரியிருந்தனர்.
இதேவேளை, மிருக பலி பூஜையை நல்ல வழியில் அல்லது கெட்ட வழியில் தடுத்து நிறுத்தப் போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்துள்ளார்.

No comments:

Post a Comment