வட கொரியாவில் தைபூன் பொலவென் எனப்பெயரிடப்பட்ட சூறாவளி காற்று கடுமையாக தாக்கியூள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இதில் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு வீதியில் சாய்ந்தன.
இதில் 48 பேர் இறந்தனர். 80 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 20000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாக கண்டறிய முடியவில்லை.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட கடுமையான் வெள்ளப்பெருக்குக்கு 169 பேர் உயிரிழந்ததோடு 400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். இந்த துயரம் மறையும் முன்பே இச்சூறாவளி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது வடகொரியா.
50,000 ஹெக்டேர் நிலம் முற்றிலும் நீரில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்துள்ள நிலையில் வடகொரியா ஐ.நா. அமைப்பிடம் உணவுப்பொருட்கள் வழங்கி உதவிட வேண்டியிருந்தது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment