Search This Blog

Pages

Saturday, September 8, 2012

தேசிய செலவீனங்களில் 6 வீதத்தினை ஒதுக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது!

heahaliye about lectures strike
பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய செலவீனங்களில் 6 வீதத்தினை ஒதுக்கும் படி விரிவுரையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள அநேக நாடுகள் கல்விக்காக இவ்வாறான பெறுமானத்தை ஒதுக்கவில்லை எனவும் ஹெகலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment