அம்பாறை மாவட்ட காவல் துறை அத்தியட்சகர் பிரேம்லால் ரனகலவிற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்த புகார்களையடுத்து தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேச காவல்துறை நிலையங்கள் தற்காலிகமாக அவரது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கல்முனை,சம்மாந்துறை,பொத்துவில்,அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய காவல் நிலைய பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களே அவரது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை அமலில் இருக்கும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
பிரேம்லால் ரனகலவிற்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறை பேச்சாளர் கூறுகிறார்.
தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகவே இந்நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மு.கா வின் குற்றச்சாட்டுக்கள் தொர்பான எமது செய்தி
No comments:
Post a Comment