தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை மீண்டும் (06) திறக்குமாறு உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பை தொடர்ந்து உயர் கல்வி அமைச்சு ஆகஸ்ட் 21 ம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பல உயர் கல்வி நிறுவனங்களை மூடியது. இதனை தற்போது மீண்டும் நாளை திறக்குமாறு உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.விரிவுரையாளர்கள் பணிபகிஸ்கரிப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஜூலை 04 ம் தேதி ஆரம்பித்த வேலை நிறுத்தத்தினால் நாடு பூராகவும் சுமார் 70000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.விரிவுரையாளர்களை திருப்திப்படுத்தும் தீர்வுகளை அரசு முன்வைக்காமையினால் இவர்களின் போராட்டம் தொடர்கிறது.
இதுகுறித்து ‘பல்கலைக்கழக மாணவர்கள் கற்றல் மற்றும் ஆய்வுகள் நடவடிக்கைளில் ஈடுபடவேண்டியிருப்பதனால் பல்கலைக்கழகள் எல்லா நேரங்களிலும் மாணவர்களுக்கு திறந்து இருப்பது முக்கியமானது. இதனால் அவர்கள் நூலகங்கள் மற்றும் ஆய்வகங்கள் பயன்படுத்த முடியும் என ‘அனைத்து பல்கலைக்கழகம் மாணவர்கள் கூட்டமைப்பு (IUSF) தெரிவித்தது.
No comments:
Post a Comment