Search This Blog

Pages

Saturday, September 8, 2012

வாக்களிப்பு மந்த நிலையில்: மக்கள் ஆர்வம் குறைவு


DSCF2729
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை 30 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 
சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளுக்கு இன்று நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களின் ஆர்வம் குறைவாக காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுவரை குறைந்த எண்ணிக்கையானோரே வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்தமை அவதானிக்கப்பட்டுள்ளதாக கபேதெரிவித்துள்ளது. 
‘கடந்த காலங்களில் இம்மாகாணங்களில், குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்தில், நேரகாலத்துடன் வாக்களிக்கப்படும் போக்கு அவதானிக்கப்பட்டது. எனினும் இவ்வருடம் இப்போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தென்படுகிறது’ எனதெரிவித்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையானோரே வாக்களிக்கச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரத்தினபுரி – 20%
திருகோணமலை – 30%
பொலன்னறுவை – 35%
அநுராதபுரம்  - 25%
மட்டக்களப்பு – 25%
என்ற அடிப்படையில் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment