கல்முனை இலங்கை போக்குவரத்து பஸ் சந்திக்கு அருகில் சாராயம் கொண்டு சென்ற கார் ஒன்றை பொலிஸார் வழிமறித்துப் பிடித்துள்ளனர்.
59 சாராய போத்தல்களை ஏற்றிய கார் இன்று (08) அதிகாலை 1 மணியளவில் பொலிஸார் வசம் மாட்டிக் கொண்டது.
காருடன் சாராய போத்தல்களும் சாரதியும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சாராய போத்தல்கள் ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment