Search This Blog

Pages

Saturday, September 8, 2012

தொடரும் தேர்தல் வன்முறை சம்பவங்கள்

8087598881288943235rohanahetti2
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு வாக்குப்பதிவு இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை 10 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 
எனினும் இவற்றில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுரம் வெளியிடல், விருப்பு இலக்கத்தை பார்வைக்கு வைத்தல் உள்ளிட்டவை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்து சிலரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனினும் பொதுவாக நோக்குமிடத்து தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment