1233 ஆண்டுகளுக்கு முன்பு கர்பலா சாட்சியம் வகித்த அதே துயரம் சம்பவம் போலவே சிரியாவிலும் நடக்கிறது என்று துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இஸ்தான்புல்லில் துவங்கிய ‘மேற்காசியாவில் அரபு நவீன எழுச்சியும், அமைதியும்!’ என்ற மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
அப்பொழுது அவர் கூறியது: “சொந்த நாட்டு குடிமக்களை ஆயுதம் உபயோகித்து கொடூர கொலைகளை அரங்கேற்றும் சிரியா அதிபர் பஷருல் அஸத் ஏகாதிபத்திய ஆட்சியாளர் ஆவார். இஸ்லாம், கொலையை மனித குலத்திற்கு எதிரான குற்றமாக பார்க்கிறது என்று தெரிந்த பிறகும் சிரியா நகரங்களில் ஆஸத், பொதுமக்களை கூட்டமாக கொலைச் செய்கின்றார்.
சிரியா போன்ற முஸ்லிம் பிரச்சனைகளில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பெரிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நவீன காலத்தின் கர்பலாதான் சிரியா. ஆகவே சிரியாவின் பிரச்சனைகளை புறக்கணிக்கவோ, மெளனம் சாதிக்கவோ நம்மால் இயலாது என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment